நேற்று நள்ளிரவில் வெளியான ‘விவேகம்’ டீஸரை, விஜய் ரசிகர்கள் பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர்.

அஜித்தின் ‘விவேகம்’ டீஸர், நேற்று நள்ளிரவு வெளியானது. இதற்காக, #VivegamTeaser #VivegamTeaserDay #VivegamTeaserTonight என்றெல்லாம் பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, ட்ரெண்ட் செய்து வைத்திருந்தனர். அவர்களுக்குப் போட்டியாக, #ROFLVivegamTeaser #ROFLVivegamTeserMemes என்ற ஹேஷ்டேக்குகளை விஜய் ரசிகர்களும் உருவாக்கி, சரமாரியாக கலாய்த்துள்ளனர்.

ஒருவரின் படம், டீஸர், டிரெய்லர் ரிலீஸின்போது இன்னொருவரின் ரசிகர்களின் கலாய்ப்பது வழக்கம்தான். ஆனால், நாளாக நாளாக இது அதிகரித்து வருகிறது.

பலவிதமான மீம்ஸ் மூலம் ‘விவேகம்’ டீஸரைக் கலாய்த்திருக்கும் விஜய் ரசிகர்கள், விஜய் மட்டுமின்றி, விக்ரம், கமல், தனுஷ், வடிவேலு, விஜய் சேதுபதி என பல நடிகர்களின் புகைப்படங்களையும் வைத்து கலாய்த்துள்ளனர். அதிலும் ஒருபடி மேலே போய், அஜித்தை வைத்தே கலாய்த்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published.