ஏழை மக்களுக்கு ” இணைந்த கரங்கள் ” அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!

தமிழ் சினிமாவில் தப்பாட்டம் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகி பப்ளிக் ஸ்டார் என பெயரெடுத்தவர் துரை சுதாகர், இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ( 20.11.17) சென்னையில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தையல் எந்திரம், தள்ளுவண்டி கடை, சைக்கிள் என பல பொருட்களை  “இணைந்த கைகள்” என்ற இம்மான் அண்ணாச்சியின் அறக்கட்டளை மூலமாக நலத்திட்ட உதவிகளாக செய்துள்ளார்.


இவரது இந்த முயற்சி கோலிவுட்டில் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் மக்களும் துரை சுதாகர் அவர்களை பாராட்டி வருகின்றனர். எங்களது இணையதளம் சார்பாகவும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.